ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த ஜனநாயகன் வசூல்.. ஹிந்தியில் மட்டும் எத்தனை கோடி பாருங்க

By Parthiban A Jul 26, 2026 11:23 PM GMT
Report

விஜய்யின் ஜனநாயகன் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரைக்கு வந்தது. விஜய்யின் முந்தைய படங்களில் சாதனை வசூலை இந்த படம் தொடவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வசூலை பெற்று வருகிறது.

ஜனநாயகன் முழு படமும் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்ததும் வசூல் குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகரித்த ஜனநாயகன் வசூல்.. ஹிந்தியில் மட்டும் எத்தனை கோடி பாருங்க | Jana Nayagan Hindi Box Office First Week Total

ஹிந்தி வசூல்

ஜனநாயகன் ஹிந்தியில் ஜனநேடா என்கிற பெயரில் ரிலீஸ் ஆகி இருந்தது. முதல் நாளில் ஹிந்தியில் வெறும் 1.65 கோடி ரூபாய் நெட் வசூலை படம் பெற்று இருந்தது.

இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்தது. ஞாயிறு அன்று சுமார் 3 கோடி ரூபாய் நெட் வசூல் வந்திருக்கிறதாம். அதன் மூலமாக முதல் வார இறுதியில் மொத்த நெட் வசூல் 9 கோடியை தொட்டு இருக்கிறது.

அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US