ஜனநாயகன் படத்தின் ரன் டைம் இவ்வளவு நேரமா! ஷாக் கொடுத்த லேட்டஸ்ட் தகவல்
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

2026 ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை கொண்டாடடி தீர்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டே இருக்க, தொடர்ந்து இப்படம் குறித்து அப்டேட்ஸ் வெளியாகின்றன.

ப்ரீ பிசினஸ், படத்தின் கதை, பாடல்கள், முக்கிய நட்சத்திரங்களின்கேமியோ குறித்து எல்லாம் தகவல் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் ரன் டைம் குறித்து தெரியவந்துள்ளது.
ரன் டைம்
அதன்படி, ஜனநாயகன் படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என கூறப்படுகிறது. இவ்வளவு நீளமான படமா என சிலர் ஷாக் ஆனாலும், 4 மணி நேரமாக இருந்தாலும் பார்த்து கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

அதே போல் இந்த 3 மணி நேரம் 6 நிமிடங்களில் கடைசி 20 நிமிடங்கள் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.