ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்.. என்ன தெரியுமா
ஜனநாயகன்
நடிகர் விஜய்யின் படம் என்றால் ரிலீஸுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனைத்து பிசினஸ் நடைபெற்று முடிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பூஜை போடும்போதே படத்தில் சில முக்கிய உரிமைகளை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றி விடுவார்கள்.
ஆனால், தற்போது நடந்துள்ள விஷயம் ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது. விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சாட்டிலைட் உரிமை
இந்த நிலையில், இதுவரை ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
