ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளிவந்த மாஸ் அப்டேட்
தளபதி கச்சேரி
தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இருந்து கடந்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி முதல் பாடல் 'தளபதி கச்சேரி' வெளிவந்தது. அனிருத் இசையில் உருவான இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் வைரலானது.

தரமான பாடலை விஜய்யின் கடைசி படத்திற்காக அனிருத் கொடுத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் கூறினர். Youtube-ல் இதுவரை தளபதி கச்சேரி 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இரண்டாவது பாடல்
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இரண்டாம் பாடல் ரிலீஸ் ஆகும் என கூறுகின்றனர். இது மிகவும் எமோஷனலான மாஸ் பாடலாக விஜய்க்கு இருக்கும் என்கின்றனர்.

அதனால்தான் இரண்டாவது பாடலை நாளைய தீர்ப்பு படம் வெளிவந்த நாளில், அதாவது விஜய்யின் திரையுலக வாழ்க்கை தொடங்கிய நாளான டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
ஜனநாயகன் ரிலீஸ்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், மோனிஷா, பிரியாமணி, கவுதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri