என்ன தான் நடந்தது.. ஆதங்கத்துடன் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஜனநாயகன் தயாரிப்பாளர்
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன், அதை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து இருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி, அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம், சென்சார் போர்டு கலைக்கப்பட வேண்டிய ஒன்று என பல முக்கிய சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதன் தீர்ப்பு வந்தபிறகு தான் படம் ரிலீஸ் செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தயாரிப்பாளர் வீடியோ
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கே வெங்கட நாராயணா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். படத்தை சென்சார் போர்டுக்கு போட்டு காட்டியதில் இருந்து தற்போது வரை என்ன நடந்தது என கூறி இருக்கிறார்.
மேலும் விஜய்யின் farewell படத்திற்கு இப்படியா நடக்கணும் என ஆதங்கத்துடன் பேசி இருக்கும் அவர், ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
— KVN Productions (@KvnProductions) January 9, 2026
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan