ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ்.. 16 நாட்களில் இத்தனை கோடி வசூலா!!
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகரான விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம், 16 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்
விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.

அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் ரசிகர்கள் எவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வருவார்கள் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை. என்னதான் படம் லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்திருந்தாலும் கூட, இப்படத்தை தலைமேல் தூக்கி கொண்டாட வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அதை நாம் கண்கூடாத தற்போது வரை பார்த்து வருகிறோம்.

ரசிகர்கள் கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்கிறது, அதன் மூலம் லாபம் எவ்வளவு கிடைத்துள்ளது, எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
16 நாட்களில் தமிழ்நாடு வசூல்
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து நாம் பார்த்து வரும் நிலையில், 16 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 136.5 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
