மலேசியா Record Bookல் இடம்பெற்ற விஜய்யின் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா.... தளபதி செம மாஸ்
ஜனநாயகன்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர். இவரது பட ரிலீஸ் என்றாலே திருவிழா கோலமாக மாறிவிடும் தமிழகம், இப்போது ஜனவரி 9 எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
எச். விளோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், மமிதா பைஜு, பிரியாமணி என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
இன்று பிரம்மாண்டத்தின் உச்சமாக மலேசியாவில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

மாஸ் செய்த விஜய்
மலேசியாவில் National Stadium Bukit Jalil என்ற இடத்தில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த அரங்கில் 80,000 ஆயிரம் பேர் வரை வரலாம்.
தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டை காண 75,000க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
ஒரு தமிழ் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பேர் பங்குபெற்றது இதுவே முதன்முறை என்பதால் இந்நிகழ்ச்சி Malaysia Book Of Recordல் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி மேடையிலேயே விஜய்யிடம் சாதனைக்கான பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.