ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.. ரசிகர்கள் சற்று வருத்தம்
இசை வெளியீட்டு விழா
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் வகையில் தளபதி கச்சேரியாக நடக்கிறது.

இந்த தளபதி கச்சேரியில் 85,500 பேர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை காண முடியும். விஜய்யின் திரை வாழ்க்கையில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய பின்னணி பாடகர்களை அழைத்து, இந்த தளபதி கச்சேரியில் பாடவைக்கவுள்ளனர். இதற்காக வீடியோக்கள் கூட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து வெளிவந்தது.
வருத்தத்தில் ரசிகர்கள்
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரலையில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரலை இல்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது.

இசை வெளியீட்டு விழா முடிந்து சில நாட்கள் கழித்து வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan