தளபதி திருவிழா: ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மூலம் பல கோடி லாபம்.. அடேங்கப்பா!
தளபதி திருவிழா
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகனை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது.

இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி இதனை விஜய்க்கு ட்ரிபியூட் தரும் திருவிழாவாக செய்துள்ளனர். சைந்தவி, ஆண்ட்ரியா, எஸ்.பி. சரண், திபு, ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள், பாடகிகள் இணைந்து விஜய்யின் சூப்பர்ஹிட் பாடல்களை அங்கு பாடவுள்ளனர்.
பல கோடி லாபம்
மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் அரங்கத்தில் தளபதி திருவிழா நடைபெறுகிறது. 85000 பேருக்கும் மேல் இந்த அரங்கத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை காணலாம். இதனால், இதற்கென்று தனி டிக்கெட் புக்கிங் ஓப்பன் செய்துள்ளனர்.

ரூ. 2,141 தொடங்கி ரூ. 14,000 வரை டிக்கெட் ரேஞ் உள்ளது. ரூ. 40 கோடி வருவாய் வரும் என்கின்றனர். இதனால் இந்த விழாவிற்கான செலவு போக, இதன்மூலம் பல கோடிகள் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri