ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு வந்திருக்கும் புது தலைவலி! நீதிமன்றத்தில் நடத்த பரபரப்பு வாதம்
ஜனநாயகன் படத்தின் சென்சார் பிரச்சனையால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாமல் படம் தள்ளிப்போய் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தாலும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தலையிட விரும்பவில்லை என கூறிவிட்டதால், சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்கிற நிலை தான் இருக்கிறது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. ஜனநாயகன் தயாரிப்பாளர் தரப்பு மற்றும் சென்சார் போர்டு தரப்புக்கும் தலா அரை மணி நேரம் வாதாட நேரம் கொடுக்கப்பட்டது.

அமேசான் ப்ரைம் நிறுவனம் அழுத்தம்
இந்நிலையில் ஜனநாயகன் ரிலீஸ் தேதியில் குழப்பம் நீடிப்பதால் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருக்கும் அமேசான் ப்ரைம் நிறுவனம் நஷ்டஈடு கேட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கிறது. இதனை KVN நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர் வாதத்தின் போது குறிப்பிட்டு இருக்கிறார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை பிறகு வழங்குவதாக அறிவித்தனர். இருப்பினும் தேதியை நீதிபதிகள் அறிவிக்கவில்லை.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan