ஜனநாயகன் படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய பாதிப்பு.. கேஜிஎப் இயக்குநரின் அதிரடி
ஜனநாயகன்
தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதை தொடர்ந்து Dawn Pictures தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், "This Pongal" என குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதன்மூலம் அவர் தயாரித்து வரும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பராசக்தி திரைப்படத்தை 2026 பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக பேட்டி ஒன்றில் ஏற்கனவே அவர் கூறியிருந்த நிலையில், தற்போது அதனை உறுதி செய்துள்ளார். இதன்மூலம், விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோதவிருக்கிறது.
வசூலுக்கு பாதிப்பு
இந்த நிலையில், 2026 பொங்கல் பண்டிகைக்கு இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் வெளிவரவுள்ளது. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரஷாந்த் நீல் நடிப்பில் உருவாகி வரும் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறார்கள்.
இப்படம் 2026 பொங்கலுக்கு வெளிவரும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இப்படியிருக்க, கண்டிப்பாக இது விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வசூலை பாதிக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu
