முதல் நாளிலேயே விஜய்யின் ஜனநாயகன் எவ்வளவு வசூலிக்கும்... கணிக்கப்பட்ட விவரம்
ஜனநாயகன்
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரின் கவனமும் ஒரே ஒரு படத்தின் மீது தான் உள்ளது, வேறென்ன படம் ஜனநாயகன் தான்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் அவரது திரைப்பயணத்தில் நடித்துள்ள கடைசிப்படம் இது. வரும் ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள்.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
ரிலீஸ் தேதியை நோக்கி ரசிகர்கள் இருக்க இன்னும் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காமல் உள்ளது, அந்த வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கின்றனர், ரசிகர்களும் கொஞ்சம் பதற்றமாக தான் உள்ளனர்.

வசூல் விவரம்
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயகன் வரும் ஜனவரி 9 ரிலீஸ் என்பதால் ப்ரீ புக்கிங் எல்லாம் எப்போதோ தொடங்கிவிட்டது.
பல இடங்களில் முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. நாடு முழுவதும் சுமார் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுள்ளனவாம்.
தற்போது படத்திற்கான முன்பதிவு விவரங்களை வைத்துப் பார்க்கும் போது இப்படம் முதல் நாள் வசூலில் ரூ. 50 கோடி வரை வசூலிக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.