"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.

பின்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதன்பின், வழக்கை வாபஸ் பெற்றாலும், 2026 தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் சம்பந்தமான படங்கள் வெளிவராது என கூறப்பட்டது. இதனால் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பின் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால், இதற்கிடையில் இப்படம் இணையத்தில் லீக்காகிவிட்டது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையே கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதற்கான புகார் அளிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
ரிலீஸ் தேதி
இந்த நிலையில், ஒருவழியாக இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துவிட்டது. மேலும் ஜூலை 23 அல்லது 24-ஆம் தேதி படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கே.வி.என் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ:
Tested by fire.
— KVN Productions (@KvnProductions) July 15, 2026
Forged by time.
Built for history.
The tougher the battle,
The louder the victory.#JanaNayaganFromJuly23#JanaNayakuduFromJuly23#JanNetaFromJuly23
The Hon'ble Chief Minister @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol… pic.twitter.com/21xjixgUBM
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan