ஜனநாயகன் லீக் விவகாரம்.. குற்றத்தை மறுக்கும் எடிட்டர்! முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு
விஜய்யின் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது சமீபத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் சினிமா துறை பிரபலங்கள் லீக் செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என கூறினார்கள்.
சைபர் க்ரைம் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டு இதுவரை 8 பேரை கைது செய்திருக்கின்றனர். எடிட்டர் ஆக பணியாற்றும் உமாசங்கர் தான் படத்தை லீக் செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக போலீசார் கூறி இருக்கின்றனர்.

முன்ஜாமீன்
இந்நிலையில் முழு படம் லீக் ஆனதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எடிட்டர் உமாசங்கர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார். நான் யாருடனும் படத்தை பகிரவில்லை என கூறியுள்ளார் அவர்.
உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைக்க என்னை பலி கடா ஆக்குகிறார்கள் எனவும், சமீபத்தில் இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டதாக கூறி முன்ஜாமீன் கேட்டிருக்கிறார்.
ஆனால் உமாஷங்கருக்கு முன்ஜாமீன் வழங்க கேவிஎன் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. கைதில் இருந்து தப்பிக்க ஹாஸ்பிடலில் அவர் அட்மிட் ஆகி இருக்கிறார் எனவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu