10 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Aug 02, 2026 03:51 AM GMT
Report

ஜனநாயகன் 

தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த விஜய், தற்போது முதலமைச்சர் ஆகிவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கிய இவர், முழுமையாக சினிமாவிலிருந்து விலகுவதாக கூறி, ஜனநாயகன் தனது கடைசி படம் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

10 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Jananayagan Movie 10 Days Box Office

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதமே இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.

10 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Jananayagan Movie 10 Days Box Office

6 மாதங்கள் பல போராட்டங்கள் மற்றும் பல தடைகளை கடந்து கடந்த மாதம் திரைக்கு வந்தது ஜனநாயகன். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் வழக்கத்தை விட இரட்டிப்பு கொண்டாட்டம் இருந்தது. அதேபோல் கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது எழுந்தன.

வசூல் 

முதல் நாளிலிருந்து ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில், 10 நாட்களில் ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 275 கோடி வசூலித்துள்ளது.

10 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Jananayagan Movie 10 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US