பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 14 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்..
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 14 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்
விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு மாபெரும் கொண்டாட்டம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் கிடைத்தன.

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் ஜனநாயகன் திரைப்படம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழ்நாடு வசூல் விவரம்
ஜனவரி மாதம் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக ரூ. 200 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் வசூலித்திருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், படம் லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்துவிட்டனர். இதுவே இப்படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய அடியாகும். இருப்பினும் இப்படம் ரூ. 150 கோடியாவது தமிழ்நாட்டில் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் தான் ஜூலை 23-ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், 14 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 133 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடியை எட்டுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu