14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய்

Report

ஜனநாயகன் திரைப்படத்தின் 14 நாட்கள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனநாயகன்

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக பயணித்து, அதில் 25 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தளபதி விஜய். இவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய் | Jananayagan Movie 14 Days Worldwide Box Office

இவர் நடிப்பில் கடைசியாக உருவான ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன்பே வெளிவரவிருந்தது. ஆனால், தொடர்ந்து பல பிரச்சனைகளையும் தடைகளையும் சந்தித்து தேர்தலுக்கு பின், முதலமைச்சர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' என்கிற டைட்டில் கார்டுடன் வெளியானது.

14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய் | Jananayagan Movie 14 Days Worldwide Box Office

இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்..

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்..

பாக்ஸ் ஆபிஸ்

விஜய் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அப்படம் முதல் நாள் செய்யும் வசூல் குறித்து திரையுலகில் பேசப்படும். அதேபோல் 3-வது நாள் எவ்வளவு வசூல் செய்தது? முதல் 7 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பதை பற்றி திரையுலகினரை தாண்டி ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள்.

14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய் | Jananayagan Movie 14 Days Worldwide Box Office

இந்நிலையில், 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிகில், லியோ, கோட் திரைப்படங்களை தொடர்ந்து ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் 4-வது திரைப்படமாக ஜனநாயகன் இணைந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US