ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
17 நாட்களில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன்
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. மறுபுறம் கலவையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

சரிவு
ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் வசூல் குறைவாகவே உள்ளது. எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்பதால், கிட்டத்தட்ட அந்த இடங்களில் மட்டும் தோல்வியை நோக்கி ஜனநாயகன் நகர்ந்து கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

உலகளவில் செய்துள்ள வசூல்
ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 17 நாட்களை கடந்திருக்கும் ஜனநாயகன் உலகளவில் இதுவரை ரூ. 310 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri