21 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

By Karthick Raja Aug 13, 2026 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 21 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன்

2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அவருடைய கடைசி படம் இது என்பதால், திருவிழா போல் இப்படத்தை கொண்டாட அனைவரும் காத்திருந்தனர்.

21 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Jananayagan Movie 21 Days Tamilnadu Box Office

ஆனால், ஜனவரி மாதம் இப்படம் வெளிவராதது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. 6 மாதங்களுக்கு பின் பல பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஜனநாயகன் வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்நாட்டில் இப்படம் வசூல் செய்யவில்லை என்றாலும், திருட்டுத்தனமாக லீக் ஆகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பா என அனைவரையும் வியக்க வைத்தது.

தமிழ்நாடு

பாக்ஸ் ஆபிஸ் முதல் நாளிலிருந்தே ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் குறித்த வசூலை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்நிலையில், 21 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

21 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Jananayagan Movie 21 Days Tamilnadu Box Office

அதன்படி, இப்படம் 21 நாட்களில் ரூ. 145 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும், இப்படத்தின் இறுதி வசூல் தமிழ்நாட்டில் எவ்வளவு வரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US