3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜனநாயகன்
ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன்.

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், படம் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இருப்பினும், இப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் தான் பார்ப்போம் என ஆவலுடன் காத்திருந்தனர்.

அப்படி எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சும்மாவே விஜய்யின் திரைப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதுவும் இது விஜய்யின் கடைசி படம், சொல்லவா வேண்டும்.
தமிழ்நாடு வசூல்
ஜனநாயகன் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவில் இதுவரை ரூ. 165 கோடியை தாண்டியுள்ள இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரியுமா? 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 64 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri