7-வது நாளில் சரிந்த ஜனநாயகன் வசூல்.. விஜய் படத்திற்கே இந்த நிலைமையா

By Karthick Raja Jul 30, 2026 03:00 AM GMT
Report

ஜனநாயகன்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஜனநாயகன்.

7-வது நாளில் சரிந்த ஜனநாயகன் வசூல்.. விஜய் படத்திற்கே இந்த நிலைமையா | Jananayagan Movie 7 Days Worldwide Box Office

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

6வது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவா?

6வது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவா?

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த வாரம் வெளியானது. விஜய் படம் என்றாலே மாபெரும் அளவில் அப்படத்தை கொண்டாடுவார்கள், அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே வேண்டாம்.

வசூல் 

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ளது. இதுவரை ஒவ்வொரு நாளும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தொடர்ந்து பார்த்து வந்துள்ளோம். இந்த நிலையில், 7 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

7-வது நாளில் சரிந்த ஜனநாயகன் வசூல்.. விஜய் படத்திற்கே இந்த நிலைமையா | Jananayagan Movie 7 Days Worldwide Box Office

அதன்படி, 7 நாட்களில் ரூ. 245 கோடி வசூல் செய்துள்ளது. 6 நாட்கள் முடிவில் ரூ. 234 கோடி வசூல் செய்திருந்த நிலையில், 7-வது நாளில் ரூ. 11 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது ஜனநாயகன் திரைப்படத்திற்கு வார நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும். ஆனால், வார இறுதியில் கண்டிப்பாக இந்த வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US