9 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் பல தடைகளை தாண்டி விஜய் முதலமைச்சரான பிறகு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. கடந்த வாரம் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தொடர்ந்து குறித்த தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் ஜனநாயகன் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 112 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விஜய்யின் முந்தைய திரைப்படங்களோடு ஒப்பிடும்போது இது இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குறைவான வசூல் தான். ஆனால், லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படம், A சான்றிதழுடன் வெளியான திரைப்படத்திற்கு இவ்வளவு வசூல் தமிழ்நாட்டில், அதுவும் 9 நாட்களில் கிடைத்துள்ளது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.