ஜனநாயகன் சென்சார்: ரன் டைம் என்ன தெரியுமா? கடைசி 20 நிமிடம் செம மாஸ்
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதை நாம் அறிவோம். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.
இன்று மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யின் குட்டி கதையை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சென்சார்
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் சென்சார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சமீபத்தில் ஜனநாயகன் படத்தை சென்சார் செய்துள்ளனர். இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயகன் படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது.

இதில் படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தான். மீதமுள்ள கடைசி 20 நிமிடங்கள் விஜய்க்காக சிறப்பு எடிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.