தமிழ்நாட்டில் இல்லை.. முக்கிய இடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஜனநாயகன்.. வசூல் வேட்டை
ஜனநாயகன்
முதலமைச்சர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் வெற்றி
கடந்த வாரம் ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் கலவையான விமர்சனங்களையும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வசூல் வேட்டையை ஜனநாயகன் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் முதல் வெற்றியை அடைந்துள்ளது ஜனநாயகன். இதுவரை ஹிந்தியில் மட்டுமே இப்படம் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.