ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
விஜய்
தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று கூடியிருக்கிறார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஜனநாயகன் முதல் பாடல்
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனநாயகன் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்தது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி, வருகிற 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.