முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் செய்து வரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஜனநாயகன்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் தற்போது ஜனநாயகன் ரிலீஸ் உறுதியாகியுள்ளது.

வருகிற ஜூலை 23-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.
முன்பதிவு வசூல்
இந்த நிலையில், வெளிநாட்டில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி, அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 1.75 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
