விஜய்யின் ஜனநாயகன் படம் இந்த ஆண்டு வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

Kathick
in திரைப்படம்Report this article
ஜனநாயகன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும்.
இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வர, கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில்தான் இப்படத்திலிருந்து போஸ்டர்களை படக்குழு வெளியிட்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரிலீஸ் தேதி
ஜனநாயகன் படம் வருகிற அக்டோபர் மாதம் இப்படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
ஆம், இந்த ஆண்டு வெளிவரவிருந்த ஜனநாயகன் திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி- அடுத்தக்கட்டத்திற்கு சென்ற காதல்.. ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? Manithan

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan
