மலேசியாவில் மாபெரும் சாதனை படைத்த ஜனநாயகன்.. இத்தனை டிக்கெட்ஸ் விற்பனையா!!
ஜனநாயகன்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, சுனில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் ஜனநாயகன் படத்தை 9ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
சாதனை படைத்த ஜனநாயகன்
ஜனநாயகன் படத்தின் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் மட்டுமே ரூ. 36 கோடி வசூல் வந்துள்ளது. இந்த நிலையில், மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதில், இதுவரை மலேசியாவில் ஜனநாயகன் படத்திற்கு 75,000 டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம், இதற்கு முன் இருந்த சாதனையை ஜனநாயகன் முறியடிக்க தொடங்கிவிட்டது.