விஜய்யின் ஜனநாயகன் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் வைரல்
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
படத்தின் கதை
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், ஜனநாயகன் படத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மக்களை திசைதிருப்புவது குறித்து மக்களுக்கு சில அட்வைஸ் வழங்குவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறதாம். இறுதியாக ஜனநாயகம் எப்படி இயங்க வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக இப்படம் உருவாகி வருகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu
