ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் 120 கோடிக்கும் மேல் வசூல்..
சமீபத்தில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த விஜய், அரசியலில் களமிறங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார்.

இனி இவரை ஒரு நடிகராக மட்டும் நம்மால் பார்க்க முடியாது; இந்தியாவின் அரசியல் பெரும்புள்ளிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிட்டார். ஆம், இவரின் ஆளுமையை மே 4 அன்றே தமிழகம் தாண்டி இந்தியாவே பார்த்து வியந்துபோனது.
ஜனநாயகன்
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் ஜனநாயகன். முதல் வாரம் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் இருந்தாலும் கூட, அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது.

காரணம், படம் ரிலீஸுக்கு முன்பே லீக்கானது, ஏ சான்றிதழுடன் ரிலீஸ் ஆனது, மேலும் ஸ்பைடர் மேன், ஒடிசி போன்ற திரைப்படங்களுக்கு இடையே ரிலீஸ் ஆனது என பல விஷயங்கள் உள்ளன. இது ஜனநாயகன் படத்தின் வசூலுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
வசூல்
இருப்பினும், இவ்வளவு தடைகளையும், பிரச்சனைகளையும் கடந்து வெளிவந்த ஓர் திரைப்படம் இவ்வளவு வசூல் செய்தது என்பதே மாபெரும் சாதனை என தமிழ் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஜனநாயகன் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 129 கோடி வசூலித்துள்ளது.