ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த நடிகை ப்ரியாமணி.. என்ன சொன்னார் தெரியுமா
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறார்கள். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இது விஜய்யின் கடைசி திரைப்படமாகும். சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அண்மையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால், இதன்பின் எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளிவரவில்லை.
ப்ரியாமணி
இப்படி இருக்க இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ப்ரியாமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் அப்டேட் ஒன்று கொடுத்துள்ளார்.
இதில் "விஜய்யுடன் நடிப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஜனநாயகன் சூப்பர் ஸ்பெஷல் படமாக இருக்கும். ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். எனது கரியரில் இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும்" என ப்ரியாமணி கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
