வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ

Report

ஜனநாயகன் 

இயக்குநர் ஹெச். வினோத் தளபதி விஜய் முதன்முறையாக ஜனநாயகன் திரைப்படத்திற்காக கைகோர்த்தனர். அதுவும் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இப்படத்தை ஹெச். வினோத் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ | Jananayagan Movie Will Release In June

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கே.வி.என் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது.

வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ | Jananayagan Movie Will Release In June

சென்சார் சான்றிதழ்

பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ட்ரீட்டாக வெளிவரவிருந்த ஜனநாயகன், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக வெளிவரவில்லை. இதன்பின், படக்குழு நீதிமன்றத்தை நாடினார்கள், ஆனாலும் எதிர்பார்த்தபடி சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆனதால் அந்த வழக்கை வாபஸ் பெற்று ரீவைசிங் கமிட்டிக்கு சென்றனர்.

வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ | Jananayagan Movie Will Release In June

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்துவிட்டு சென்சார் சான்றிதழ் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் படம் எப்படியோ லீக்காகி படக்குழுவிற்கும், மொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வந்துவிட்டதால், தற்போது படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ | Jananayagan Movie Will Release In June

நடந்து முடிந்த தேர்தலில் தளபதி விஜய்யின் தவெக கட்சி வென்று தற்போது ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜனநாயகன் படம் எப்போது என ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் படம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளிவரும் என கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

ரிலீஸ்..? 

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டிக்கெட் புக் செய்யப்படும் 'புக் மை ஷோ' இணையதளத்தில் ஜனநாயகன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ | Jananayagan Movie Will Release In June

மேலும், ஜூன் மாதம் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அன்றோ, அல்லது அதற்கு முன்போ ஜனநாயகன் படம் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.

வசூல் மன்னன் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு.. செம மாஸ் தகவல் இதோ | Jananayagan Movie Will Release In June

மற்றொரு இணைய பக்கத்தில் U/A16+ தணிக்கை சான்று என பதிவிட்டிருப்பதால் ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது. விரைவில் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து கே.வி.என் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US