பாக்ஸ் ஆபிஸ்: வெளிநாட்டில் ஜனநாயகன் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?
ஜனநாயகன்
தளபதி விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் மிகவும் ஸ்பெஷலாக அமையும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது பாடல் இன்று(18.12.2025) மாலை வெளியாகிறது. இப்பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
முன்பதிவு
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே முன்பதிவு பட்டையை கிளப்பும். அதுவும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கிவிட்டது.

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், வெளிநாட்டில் தொடங்கியுள்ள இந்த முன்பதிவில் இதுவரை ரூ. 28 லட்சம் வசூல் வந்துள்ளது. ரிலீஸுக்கு முன்னதாக முன்பதிவில் மொத்தம் எவ்வளவு வசூல் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.