பின்வாங்கிய ஜனநாயகன், பராசக்தி படங்கள், சோலோவாக ரிலீஸ் ஆகும் படம்... வெளிவந்த அறிவிப்பு
ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் 2026ம் வருட பொங்கல் செம கொண்டாட்ட பொங்கலாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் அது சுத்தமாக இப்போது நடக்கவில்லை. விஜய்யின் ஜனநாயகன் படம் இன்று வெளியாகி இருக்க வேண்டும், தமிழ்நாடே பெரிய அளவில் கொண்டாடி இருக்கும், ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காததால் படம் ரிலீஸ் ஆகவில்லை.

அதேபோல் நாளை ஜனவரி 10, சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருந்தது, அந்த பட ரிலீஸும் இப்போது இல்லை.
இந்த பொங்கலை எப்படியோ கொண்டாட நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
புதிய படம்
ஜனநாயகன், பராசக்தி இந்த 2 படங்களும் பின்வாங்க இப்போது தயாராகி இருக்கும் சில படங்கள் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.
அப்படி மோகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரௌபதி 2 திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாம். இந்த தகவலை இயக்குனரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#திரெளபதி2 திரைப்படம் நம் மண்ணின் வரலாறு.. வரலாற்றில் பதிவானவற்றை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள, திரையில் பதிவு செய்துள்ளோம்.
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 9, 2026
மூன்றாம் வீரவல்லாள மகாராஜரும், வீரசிம்மகாடவராயரும் சேர்ந்து வெள்ளித்திரையில் இந்த பொங்கல் தினத்தன்று வருகிறார்கள்.. நாளை சனிக்கிழமை, மாலை முன்னோட்டம் 🔥🔥🔥… pic.twitter.com/5SIZn59YgF