தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள்
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நீதிமன்ற கதவை தட்டினார் தயாரிப்பாளர்.
புகார் வந்ததால் சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை, படத்தினை மறுதணிக்கை செய்ய நான்கு வாரம் ஆகும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். படத்தில் 500 கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது என தயாரிப்பாளர் தரப்பு கூறியது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9ம் தேதி காலையில் வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. அதனால் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

பிரபலங்களின் பதிவு
விஜய் அரசியல் கட்சி தொடங்கியபிறகு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கு எதிராக பேசி வருவதால், பழிவாங்குவதற்காக இப்படி செய்கிறார்கள் என இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். "Absolute misuse of power" என இயக்குனர் அஜய் ஞானமுத்து பதிவிட்டு உள்ளார்.
மேலும் இயக்குனர் ரத்ன குமாரும் ஜனநாயகனுக்கு வந்திருக்கும் பிரச்சனை பற்றி காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples’ efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never…
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) January 7, 2026
— Rathna kumar (@MrRathna) January 7, 2026
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri