விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட்
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகி இருக்க வேண்டும்.

சென்சார் போர்டு படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து, ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

ரிவைசிங் கமிட்டி
நீதிமன்றத்தில் உடனடியாக முடிவு வராத காரணத்தினால் தற்போது படக்குழுவினர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் தற்போது ஜனநாயகன் திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர்.

ரிவைசிங் கமிட்டிக்கு ஜனநாயகன் படம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் அப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி இறுதிக்குள் ஜனநாயகன் படத்தை திரையரங்குக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்சார் போர்டு முடிவு எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri