ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் எப்போது? விஜய்யின் கடைசி படத்திக்காக செய்யப்பட்ட மாற்றம்
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் அதே தேதியில் ஜனநாயகன் ரிலீஸ் ஆகிறது.
ஹிந்தியில் ஜன்நேதா (JanNeta)என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் வட இந்தியாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறது.
ஹிந்தியில் மல்டிபிளெக்ஸ் செயின் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கண்டிஷன் போடப்படுகிறது.

ஓடிடி
அதனால் ஹிந்தியில் ஜனநாயகன் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவதற்காக ஓடிடி பற்றிய கண்டிஷனுக்கு தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லி இருக்கிறது. வட இந்தியாவில் விஜய்யின் முந்தைய படங்களை விட ஜனநாயகனுக்கு PVR, Inox, Cinepolis மல்டிபிளெக்ஸ் மூலமாக நல்ல வசூல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இரண்டு மாதம் கழித்து 2026 மார்ச் மாதத்தில் தான் ஜனநாயகன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
