ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

விஜய்யின் ஜனநாயகன்

அரசியலில் களமிறங்கி ஆட்சியை பிடித்து இன்று முதலமைச்சராக 100 நாட்களை கடந்துள்ள விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Worldwide Final Box Office Collection

இதற்கிடையில் தேர்தல் நடைபெற்று அதில் விஜய் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அதுவும் தளபதி விஜய் என்று இல்லாமல், முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் வெளிவந்து திரையரங்கை தெறிக்கவிட்டது.

ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், ரேச்சல் ரெபேக்கா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Worldwide Final Box Office Collection

கடந்த மாதம் 23-ஆம் தேதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களும் வந்தன. மேலும் சில இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி வசூல்

ஜனநாயகன் முன்பதிவில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். உலகளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்தது, வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றிய விவரங்களையும் பார்த்திருக்கிறோம்.

ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan Worldwide Final Box Office Collection

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இறுதியாக ரூ. 323.5 கோடி வசூல் செய்துள்ளது. இது விஜய்யின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான இறுதி வசூல் என்றாலும், திருட்டுத்தனமாக லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு உலகளவில் ரூ. 323.5 கோடி இறுதி வசூல் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US