அப்படி கேள்வி கேக்குறதை நிறுத்துங்க.. செய்தியாளரை திட்டிய நடிகை ஜனனி ஐயர்
நடிகை ஜனனி ஐயர் தெகிடி, அவன் இவன் போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவரது கண்களுக்காகவெ ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் அவருக்கு இருக்கிறது.
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ஜனனி ஐயர் பைனல் வரை வந்தாலும் 3ம் ரன்னர் அப் பட்டம் மட்டுமே கிடைத்தது.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு ஜனனி ஐயர் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.
செய்தியாளருடன் வாக்குவாதம்
இந்நிலையில் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு ஜனனி சென்றபோது அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர்.
பிக் பாஸ் சென்றுவந்த பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போய்ட்டிங்களே என செய்தியாளர் கேட்டதற்கு ஜனனி ஆவேசமாக பதில் அளித்தார்.
"தற்போது கெள்தம் கார்த்திக் உடன் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறேன். முன்பு இருந்தது போல தான் நான் படங்கள் நடிக்கிறேன். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும்."
"இப்படி சர்ச்சையாக கேள்வி கேட்பதை நிறுத்துங்க" என கோபமாக ஜனனி பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் நான் பிக் பாஸ் ஷோவை பார்ப்பதில்லை என்றதும், அவ்வளவு பிசியாக இருக்கீங்களா என சொல்லி திட்டுவாங்க. எனக்கு பிக் பாஸ் பார்க்க விருப்பம் இல்லை, அவ்வளவு தான்" என தெரிவித்து இருக்கிறார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
