பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணம்? உயிரை கொடுத்து போராடும் ஜனனி! எதிர்நீச்சல் சிறப்பு ப்ரோமோ
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்று ஜூலை 21ம் தேதிக்கான சிறப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சிறப்பு ப்ரோமோ
இதில் பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணம் செய்துவைக்க ஜனனி மற்றும் பெண்கள் முடிவு செய்கின்றனர். ஆனால், தந்தையை இழந்து வேதனையில் இருக்கும் பார்கவி தனக்கு எதுவும் வேண்டாம், திருமணம் வேண்டாம், குடும்பம் வேண்டாம் என கோபத்துடன் கூறிவிடுகிறார்.
மறுபக்கம் ஆதி குணசேகரன் தனது மகனுக்கு ஜான்சி ராணியின் மகளை திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். நேரடியாக மண்டபத்திற்கு சென்று, அங்கு தனது மகனுக்கும் ஜான்சி ராணி மகளுக்கும் திருமணம் செய்ய திட்டம் போடுகிறார்.
இதற்காக தனது மகன் தர்ஷனிடம் பேசும் ஆதி குணசேகரன், தாலி கட்டவில்லை என்றால் அப்பா மகன் என்கிற பாசம் அறுந்துபோய் விடும் என எச்சரிக்கிறார். ஆதி குணசேகரனின் எதிர்ப்பை தாண்டி ஜனனி மற்றும் பெண்கள் தாங்கள் நினைத்ததை எப்படி சாதிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
