என்னை இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம்.. நடிகை ஜனனி வேண்டுகோள்
நடிகை ஜனனி
அவன் இவன், தெகிடி படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை ஜனனி ஐயர். இதுமட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இவர் நடிப்பில் தற்போது வேழம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

இதற்கான பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை ஜனனி, படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
பேசிமுடித்துவிட்டு செல்லும் பொழுது அனைவருக்கும் வேண்டுங்கள் வைக்கும் விதமாக "தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை நடிகை ஜனனி நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri