லியோ பட நடிகைக்கு, லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து செய்த விஷயம்.. என்ன தெரியுமா
ஜனனி
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பலர் உள்ளனர். அந்த வகையில், பிக் பாஸ் போட்டியாளராக வலம் வந்த ஜனனி அந்த நிகழ்ச்சிக்கு பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதுவும் விஜய் போன்ற முன்னணி நடிகருடன் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
என்ன தெரியுமா
இதனால் தற்போது, 'உசுரே' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜனனி அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.