திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட மாரடைப்பு- சோகத்தில் குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு சூப்பரான தொடர். 3 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
புதிய சூப்பர் மார்க்கெட்
சின்ன பொட்டி கடை போல் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது. இந்த கடையை திறக்க குடும்பமே போராடினார்கள். பின் எப்படியே எல்லோரும் இணைந்து கடையை திறந்தார்கள்.
அடுத்து தொடரில் என்ன கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் புதிய டிராக் பற்றிய ஒரு புரொமோ வந்துள்ளது.
ஜனார்த்தனன் போட்ட புது பிளான்
ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தனது மருமகனை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து எப்படியாவது தனது கடையை நிர்வாகம் செய்ய அழைத்து வர வேண்டும் என பல நாட்களாக பிளான் போட்டார், எதுவும் சரிபட்டு வரவில்லை.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் தான் கதையின் திருப்பம் அமைந்துள்ளது. ஜனார்த்தனன் போட்ட புது பிளானா இது என்பது தெரியவில்லை
புதிய புரொமோ
ஜனார்த்தனனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை மருத்துவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூற உடனே மூர்த்தி உங்களது கடையை ஜீவா கவனித்துக் கொள்வான் என வாக்கு கொடுக்கிறார்.
இதைக்கேட்டதும் ஜீவா அதிர்ச்சி ஆனாலும் அண்ணன் சொல்லுக்காக சரி என்கிறார்.
சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்- சூப்பர் ஜோடியின் புகைப்படம்