அங்கு தான் திருமணம், வாழ்க்கையும் அங்கு தான் வாழ வேண்டும்.. திருமணம் குறித்து ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
தனது அம்மாவின் நினைவு நாள், பிறந்தநாள் வந்தாலே திருப்பதிக்கு செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
கீழ் திருப்பதியில் இருந்து 3550 படிக்கட்டுகள் நடந்தே சென்றும் ஏழுமலையானை தரிசிக்கிறார்.
அவர் அண்மையில் நியூ இயர் ஸ்பெஷலாக கூட திருப்பதிக்கு வந்திருந்தார். ஹிந்தியில் நடிகை ஜான்வி கபூர் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார், முன்னணி நாயகியாகவும் வளர்ந்துள்ளார்.
தென்னிந்தியா பக்கம் வந்தவர் தெலுங்கில் முதல் படம் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார்.
திருமணம்
இந்தியில் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் கலந்துகொண்டார்.
அதில் திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு, திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருமலையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
