அந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் ரொம்ப வேதனைய இருக்கு.. ஜான்வி கபூர் உருக்கம்
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜான்வி, தமிழ் திரைப்படத்தில் நடக்க போவதாக பல செய்திகள் உலா வந்தது. ஆனால் இதற்கு இவரின் தந்தையும், பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், 'ஜான்வி குறித்து வந்த தகவல்கள் அனைத்தும் பொய்யனாது. அதை நம்ப வேண்டாம்' என்று கூறினார்.
விமர்சனங்கள்
குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான். மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்கள் எழுந்தது.
பேட்டி ஒன்றில் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஜான்வி கபூர், " நீங்கள் எவ்ளோ தான் திறமையை வெளிப்படுத்தினாலும் உங்கள் குறைகளை மட்டும் தான் கண்டுபிடிப்பார்கள்".
வேதனை
"யாராவது என்னுடைய வேலையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தால் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். சிலர் என் நடிப்பை மேம்படுத்தி கொள்ளுமாறு கூறினால் அவர்களின் கருத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வேன்.
உனக்கு தான் நடிப்பு சரியாக வரவில்லையே, பிறகு ஏன் முயற்சி செய்கிறாய்? போன்ற கேள்வியை பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். இது போன்ற கேள்விகள் மிகவும் வேதனை அளிக்கிறது" என்று ஜான்வி கூறியுள்ளார்.
வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
