ரெட் கார்பெட்டில் சங்கடப்பட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி! உடையால் வந்த பிரச்சனை
ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது NTR30 படம் மூலமாக தெலுங்கிலும் களமிறங்கி இருக்கிறார்.
இருப்பினும் அவர் தமிழில் எப்போது நடிப்பார் என எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றம் தான். அவர் பையா 2 படத்தில் நடிப்பார் என செய்தி முன்பு பரவிய நிலையில் அது வெறும் வதந்தி என ஜான்வி கபூர் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.

விருது விழா வீடியோ
ஜான்வி கபூர் தற்போது HT India's Most Stylish 2023 விருது விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அதன் ரெட் கார்ப்பெட்டில் அவர் நீளமான ஒரு உடை அணிந்து தான் வந்திருக்கிறார்.
அந்த உடையில் நடக்கவே கஷ்டப்பட்ட ஜான்வி கபூர், போட்டுவுக்கு போஸ் கொடுக்க மேலும் சங்கடப்பட்டார். உடையை அவர் காலால் தள்ளிவிட்டு போஸ் கொடுக்க அவர் முயற்சிக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
குழந்தை பெயரை அறிவித்த அட்லீ - ப்ரியா ஜோடி! இப்படி ஒரு பெயரா?
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan