புது வீடு வாங்கிய ஜான்வி கபூர்.. விலையை கேட்டால் தலையே சுற்றும்
மிகப்பெரிய தொகை கொடுத்து ஜான்வி மும்பையில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார்.
ஜான்வி கபூர்
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடிப்பில் மிலி என்ற படம் இன்று ரிலீஸ் ஆகிறது. ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் ஜான்வி கபூர் ஒரு freezer ரூமில் சிக்கிக்கொள்வது போல தான் கதை இருக்கும்.
இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் மிலி படத்தில் ஜான்வி கபூரின் நடிப்புக்கு அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது.

புது வீடு
இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் மும்பையில் ஒரு சொகுசு வீடு வாங்கி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பாந்த்ரா பகுதியில் ஒரு duplex வீட்டை அவர் 65 கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். அது 6,421 சதுரஅடி பரப்பளவு கொண்ட வீடு என்றும், அதற்காக stamp duty மட்டுமே 3.90 கோடி ரூபாய் செலுத்தி இருக்கிறாராம் ஜான்வி.

தன் தோழியின் கணவரை இரண்டாம் திருமணம் செய்யும் ஹன்சிகா..அதிர்ச்சி தகவல்