AI மூலமாக வந்த சங்கடம்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அதிர்ச்சி புகார்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருகிறார். அவர் சூர்யா ஜோடியாக தமிழில் என்ட்ரி கொடுக்க இருந்தார், ஆனால் கங்குவா பிளாப் ஆனதால் அந்த படம் கைவிடப்பட்டது.
ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் எப்போதும் கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுக்காக அதை செய்வதாக அவர் கூறி இருக்கிறார்.
AI மூலமாக மோசடி
தனது போட்டோக்களை சிலர் எடுத்து AI மூலமாக மாற்றி மிகவும் மோசமாக இணையத்தில் பரப்புகிறார்கள் என ஜான்வி புகார் கூறி இருக்கிறார்.
அந்த போட்டோக்களை பார்க்கும்போது எனக்கு மட்டும் அது AI மூலமாக மாற்றப்பட்டது என தெரியும், ஆனால் சாதாரண மக்கள் அதை பார்த்து நம்பிவிடுவார்கள். இப்படி ஒரு பிரச்னையை தான் சந்தித்து வருவதாக ஜான்வி கூறி இருக்கிறார்.
