அட்லீ படத்திற்கு ஜான்வி கபூர் கறாராக கேட்ட சம்பளம்.. அதுவும் இத்தனை கோடியா
இயக்குனர் அட்லீ அடுத்து அல்லு அர்ஜூன் உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர்.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் நான்கு விதமான ரோல்களில் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது. இதில் தீபிகா படுகோன், ராஷ்மிகா, மிருனாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.
ஜான்வி கேட்ட சம்பளம்
அட்லீ படத்தில் நடிப்பதற்காக ஜான்வி கபூர் 7 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டு இருக்கிறாராம். இதற்கு முன் தெலுங்கில் ஜான்வி நடித்த தேவரா படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கினார், அடுத்து ராம் சரணின் பெட்டி படத்திற்கு 6 கோடி அவர் வாங்கினார்.
தற்போது மேலும் சம்பளத்தை அதிகரித்து 7 கோடி கேட்டிருக்கும் நிலையில் அதை குறைக்க அவரிடம் சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம்.
