நடிகை ஜான்வி கபூரின் படு பிரம்மாண்டமான வீடு! எப்படி இருக்கு பாருங்க
நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள். தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அடுத்து அவர் தெலுங்கில் களமிறங்கி, NTR 30 படத்தில் அவர் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். அவர் தமி்ழில் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் அடிக்கடி வந்தாலும், அது வதந்தி என தான் அவர் விளக்கம் கொடுக்கிறார்.
ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் விரைவில் ஹீரோயின் ஆக களமிறங்க இருக்கிறார்.
பிரம்மாண்டமான வீடு
ஜான்வி கபூர் தற்போது அவரது பிரம்மாண்டமான வீட்டை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார்.
அம்மா ஸ்ரீதேவி இறந்தபிறகு ஜான்வி கபூர் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கூட பேசுவதில்லையாம். அப்படி செய்தால் அவர் இல்லாததது தான் நினைவுக்கு வருமாம்.
அதனால் அம்மா இறந்த பிறகு இந்த புது வீட்டுக்கு வந்து விட்டேன். இங்கும் அம்மா இருப்பது போல் தான் நான் உணர்கிறேன் என ஜான்வி கூறி இருக்கிறார்.